Tamilnadu Assembly Session : ரசிகர் மன்றத்தில் தொடங்கிய தனது அரசியல் பயணம் மக்கள் ஆதரவால் முதலமைச்சர் பதவி வரை உயர்ந்ததாக சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.
Tamilnadu Assembly Session : ரசிகர் மன்றத்தில் தொடங்கிய தனது அரசியல் பயணம் மக்கள் ஆதரவால் முதலமைச்சர் பதவி வரை உயர்ந்ததாக சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

Published on: June 23, 2026 at 1:27 pm
சென்னை, ஜுன் 23 2026: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் பதிலளிக்கும் போது, தனது அரசியல் பயணத்தை விரிவாக விளக்கினார். “நான் நேரடியாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவன் அல்ல. 1990-ஆம் ஆண்டு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன; 2009-இல் அது ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆனது. மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த நிலையை அடைய முடியாது” என அவர் கூறினார்
விஜய், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள், வெள்ள நிவாரண பணிகள், ஊழல் எதிர்ப்பு கருத்துகள் ஆகியவற்றில் தனது இயக்கம் குரல் கொடுத்ததை நினைவுபடுத்தினார். 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரசிகர் மன்றங்கள், 2009-ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதாக கூறிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சினை, வெள்ள நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் இயக்கம் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். மேலும், 2021-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் கட்சிக்கு மறக்க முடியாத துயரமான நிகழ்வாகவே இருப்பதாக முதலமைச்சர் விஜய் கூறினார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “அரசியல் இவ்வளவு கொடூரமாக இருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“நாங்கள் எந்தக் கூட்டணியுமின்றி 35% வாக்குகளைப் பெற்றோம். எங்கள் பணியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டாலும் உறுதியுடன் நின்றனர்” என முதல்வர் தெரிவித்தார். குடும்ப அரசியலை மறுத்து, “தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் எங்களுக்கு முக்கியம்” என அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட குறைபாடுகளை படிப்படியாக சரிசெய்து வருவதாகவும், 2017 இறுதி முதல் 2026 ஏப்ரல் வரை உருவான பிரச்சினைகளை தீர்த்து முன்னேறுவதே அரசின் நோக்கம். சாதி, மதம், பணம் சார்ந்த வாக்கு அரசியலை உடைத்துவிட்டு, மக்கள் ஆதரவைப் பெற்று வந்தோம்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க பேச்சை விட செயல்தான் முக்கியம்.. எஸ்.ஏ சந்திர சேகர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com