என்.எஸ்.இ IPO vs ஜியோ IPO.. எது பெரியது, முக்கிய பங்குதாரர்கள் யார்? எவ்வளவு நிதி திரட்ட திட்டம்?

Mega IPOs Ahead : தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் நிறுவனங்கள் முறையே ₹30,000 கோடி மற்றும் ₹37,700 கோடி மதிப்பிலான மாபெரும் ஐ.பி.ஓ. வெளியீடுகளுக்கு தயாராகி வருகின்றன. சுமார் ₹5 லட்சம் கோடி மதிப்பீட்டில் என்.எஸ்.இ.யும், ₹11.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸும் பங்குச் சந்தையில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த வெளியீடுகள் இந்தியாவின் நிதி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.

Published on: June 23, 2026 at 1:44 pm

மும்பை, ஜூன் 23, 2026: தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) ₹30,000 கோடி அளவிலும், ஜியோ முதல் பங்கு வெளியீடு ₹37,700 கோடி அளவிலும் வரவிருக்கின்றன. அந்த வகையில், என்.எஸ்.இ சுமார் ₹5 லட்சம் கோடி மதிப்பீட்டிலும், ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் $137 பில்லியன் (₹11.5 லட்சம் கோடி) மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

இதில் என்.எஸ்.இ ஐ.பி.ஓ-வை பொறுத்தமட்டில் ₹30,000 கோடி ஓ.எஃப்.எஸ் முறையிலும், ஜியோ ₹37,700 கோடிபுதியவெளியீடு முலமாகவும் வெளியிட உள்ளன. 2026 நிதியாண்டில் என்.எஸ்.இ வருவாய் ₹18,700 கோடி ஆகவும், லாபம் ₹10,302 கோடி ஆகவும் காணப்பட்டது.

ஜியோ ப்ளாட்ஃபார்ம் ஐ.பி.ஓ.-வை பொறுத்தமட்டில் ₹1,46,885 கோடி வருவாய்யும், ₹30,049 கோடி நிகர லாபத்தையும் பெற்றுள்ளது. மேலும், என்.எஸ்.இ-யில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்களும், ஜியோ ப்ளாட்ஃபாமில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் , மெட்டா மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

நிறுவனங்கள் பற்றி..

தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாகும். ₹30,000 கோடி அளவிலான ஓ.எஃப்.எஸ் மூலம் எஸ்.பி.ஐ, எல்.ஐசி, Temasek, சி.பி.சி.ஐ.பி போன்ற பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.என்.எஸ்.இ.க்கு FY26-இல் ₹18,700 கோடி வருவாய் மற்றும் ₹10,302 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் IPO மூலம் நிறுவனம் நேரடி நிதி பெறாது.

மறுபுறம், ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐ.பி.ஒ இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரியது. ₹37,700 கோடி அளவிலான முதல் முறை வெளியீடு மூலம் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறது. நிதியாண்டு26-இல் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ₹1,46,885 கோடி வருவாய் மற்றும் ₹30,049 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஐ.பி.ஓ மூலம் கிடைக்கும் நிதி பெரும்பாலும் ₹27,500 கோடி கடன் குறைப்பதற்கும், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் முதலீடுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இந்த இரண்டு முதல் பங்கு வெளியீடுகளும் இந்தியாவின் நிதி சந்தை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சட்டென சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரியுமா?

தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ.. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? Share Market Today

தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ.. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com