DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு வரவுள்ளன; இதனால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளத்தில் கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்.
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு வரவுள்ளன; இதனால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளத்தில் கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்.

Published on: August 6, 2026 at 5:16 pm
புதுடெல்லி, ஆக.6, 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு தொடர்பான கணக்கீடுகள், தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட CPI-IW தரவின் அடிப்படையில் உறுதியாகிவிட்டன. ஜூன் 2026-க்கான CPI-IW குறியீடு 151.9 ஆக இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.1 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், ஜூலை 2026 முதல் அகவிலைப்படி 60%-லிருந்து 63%-ஆக உயர்த்தப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த உயர்வு 3 சதவீதப் புள்ளிகள் ஆகும். ஏழாவது ஊதியக் குழுவின் சூத்திரப்படி, அகவிலைப்படி 63.75% ஆக இருந்தாலும், தசமப் பகுதியை நீக்கி அறிவிக்கப்படுவதால், 63% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளத்தில் கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்.
அகவிலைப்படி திருத்தம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வந்தாலும், வழக்கமான நடைமுறையின்படி மத்திய அமைச்சரவை இதற்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒப்புதல் அளிக்கும். பெரும்பாலும் தீபாவளிக்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
8-வது ஊதியக் குழு தனது அறிக்கையை 2027-ல் சமர்ப்பிக்கும் என்றும், அதன் பரிந்துரைகள் 2027 இறுதியிலோ அல்லது 2028 தொடக்கத்திலோ அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, தற்போதைய ஊதியக் கட்டமைப்பின் கீழ் குறைந்தது இன்னும் இரண்டு அகவிலைப்படி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த 3% உயர்வு, ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி நிவாரணத்தை அளிக்கும். CPI-IW தரவின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு உறுதியாகும் என்பதால், இது சம்பளத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : கச்சா எண்ணெய் சந்தையில் இந்தியா.. வெனிசுலாவில் இரண்டு வயல்களை இயக்க ஒப்பந்தம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com