India’s Venezuela Oil Plan: வெனிசுலாவில் இரண்டு எண்ணெய் வயல்களை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
India’s Venezuela Oil Plan: வெனிசுலாவில் இரண்டு எண்ணெய் வயல்களை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

Published on: August 6, 2026 at 1:47 pm
Updated on: August 6, 2026 at 1:48 pm
புதுடெல்லி, ஆக.6, 2026: வெனிசுலாவின் புதிய பெட்ரோலியச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நிறுவனமான ONGC, இரண்டு எண்ணெய் வயல்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தயாராகி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக இதுவரை அங்கு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தாமல் இருந்த ONGC-க்கு, இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
ஓ.என்.ஜி.சி (ONGC) துணை நிறுவனம் விதேஷ்’, அமெரிக்காவின் ‘வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடமிருந்து’ (OFAC) வெனிசுலாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. தற்போது, ‘சான் கிறிஸ்டோபல்’ எண்ணெய் வயலில் 40% பங்குகளையும், ‘கராபோபோ-1’ திட்டத்தில் 18% பங்குகளையும் ONGC விதேஷ் கொண்டுள்ளது.
ஒ.என்.ஜி.சி நிதி இயக்குநர் அனுபம் அகர்வால், “இப்போது வெனிசுலா திட்டங்களில் பணியாற்ற எங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முன்னதாக, பொருளாதாரத் தடைகள் தொடர்பான அபாயம் காரணமாக அங்கு எங்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்தியிருந்தோம்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இதே போன்ற புவியியல் அமைப்பு கொண்ட எண்ணெய் வயல்களை இயக்கிய அனுபவம் ONGC-க்கு இருப்பதால், வெனிசுலாவில் விரைவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.
வெனிசுலா தனது புதிய பெட்ரோலியச் சட்டத்தின் கீழ் கூடுதல் சலுகைகளை வழங்குவதாகவும், பி.டி.வி.எஸ்.ஏ (PDVSA) நிறுவனத்திடமிருந்து சில திட்டங்களின் செயல்பாட்டு உரிமையை ONGC ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் இரு மடங்காக அதிகரிப்பு.. நிதியமைச்சர் மரிய வில்சன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com