அமோனியா கியாஸ் கசிவு- மரணங்கள்.. வி.ஏ.ஓ புகார்- இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Periyapalayam Ammonia Gas Leak : பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: June 23, 2026 at 1:07 pm

சென்னை, ஜூன் 23, 2026: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 67 தொழிலாளர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கேஸ் கசிவு குறித்து வி.ஏ.ஓ புகார் அளித்ததையடுத்து, பெரியபாளையம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது, குறிப்பாக அமோனியா கேஸ் டேங்க் சரியாக பராமரிக்கப்படாதது, விபத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எப்.ஐ.ஆரில் வெளியாகியுள்ள தகவலின்படி, தொழிற்சாலைக்குள்ளேயே ஊழியர்களை தங்க வைத்திருந்ததால், கேஸ் கசிவு நேரத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாதது, தொழிலாளர்களின் உயிருக்கு நேரடி அபாயத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், பெரியபாளையம் கேஸ் கசிவு சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க பேச்சை விட செயல்தான் முக்கியம்.. எஸ்.ஏ சந்திர சேகர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com