Vanathi Srinivasan | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக “PM விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்தாததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Tamilisai Soundararajan: பாரதிய ஜனதா ஆட்சியில் கீழடி ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழ் சகோதர சகோதரிகளை மு.க. ஸ்டாலின் தவறாக வழி நடத்துகிறார் என பாரதிய…
Sarath Kumar: இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காதீர் என நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்….
Tamilisai Soundararajan: டெல்லியில் இருந்து தாம் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக மு க ஸ்டாலின் கூறிய நிலையில், அவர் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப்…
Nainar Nagendran MLA: பேச்சு சுதந்திரம் உள்ளது மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார்…
Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்