Omar Abdullah | ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுகிறது என உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.
January 11, 2025
Omar Abdullah | ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுகிறது என உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.
Published on: September 29, 2024 at 2:55 pm
Omar Abdullah | ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, “கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுகிறது. இது ஏன் என பாரதிய ஜனதா பதிலளிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் நடக்காத இடமே இல்லை. செனாப் பள்ளத்தாக்கு, பிர் பஞ்சால் பகுதி, ரியாசி, கதுவா, உதம்பூர், ஜம்மு மற்றும் சம்பா என தாக்குதல்கள் நீள்கின்றன. இது பாரதிய ஜனதா அரசின் தோல்வியை காட்டுகிறது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஆனால் அவர்கள் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸூம், மக்கள் ஜனநாயக கட்சியும் பொறுப்பு என்கிறார்கள்.
அப்படியென்றால் அவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே? ஏன் அவர்கள் பேசுவதில்லை. மாறாக எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு பாகிஸ்தானை குற்றமற்றவர்கள் என்கிறார்களா? ஆனால் தேசிய மாநாட்டு கட்சி அப்படியல்ல; ஜம்மு காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்றையை பேசுகிறது.
தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா விமர்சித்துள்ளதே என்ற கேள்விக்கு, “எங்கள் தேர்தல் அறிக்கையை அவர்கள் பாராட்டுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? அவர்கள் எங்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சிதான்.
நான் அவர்களின் எதிர்வினைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேசிய மாநாட்டு கட்சி பிராந்திய கட்சி. ஆனால் அவர்கள் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக ஆக்கிவிட்டனர். பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : படுகொலைக்கு 4 நாள்கள் முன்பு.. ஜம்மு காஷ்மீர் இந்திரா ஆழமான பந்தம்: நினைவுக்கூர்ந்த பிரியங்கா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com