‘முடியாட்சியை நோக்கி நகரும் தி.மு.க; தவறான முன்னுதாரணம்’: தமிழிசை சௌந்தரராஜன்

தந்தை முதலமைச்சராகவும் (மு.க. ஸ்டாலின்), மகன் துணை முதலமைச்சராகவும் இருப்பது அரசியலில் தவறான முன்னுதாரணம்” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Published on: September 29, 2024 at 12:51 pm

Updated on: September 29, 2024 at 1:09 pm

Tamilisai | 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பெற்றார். சில மாதங்கள் கழித்து சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏயும், அவரது மகனுமான உதயநிதிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. நேற்று அக்கட்சியின் பவள விழா நடந்தது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

நன்றி ஏ.என்.ஐ

சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தி.மு.க. முடியாட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என்றால் இங்கு ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
இதை சரியான ஜனநாயக அணுகுமுறை என்று சொல்ல முடியாது. இது ஒரு தவறான முன்னுதாரணம்” என்றார்.

மா. சுப்பிரமணியன் பதிலடி

பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

செல்லாக்காசு பா.ஜ.க: அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “அடுத்த கால் நூற்றாண்டு காலம் தி.மு.க.வையும், மக்கள் நலனையும் தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி. மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பா.ஜனதாவின் கூற்றுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. தகுதி இல்லாத கட்சி என்பதாலே மக்கள் பா.ஜ.க.வுக்கு தோல்வியை பரிசளித்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க

உதயநிதி பாராட்டிய 2 திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா? Udhayanidhi Stalin

உதயநிதி பாராட்டிய 2 திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா?

Udhayanidhi Stalin : தமிழக எதிர்க்கட்சித் தலைவர் த.வெ.க. அரசை இரண்டு செயல்களுக்காக பாராட்டினார்….

வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. ஆளுநர் உரை மீது உதயநிதி குற்றச்சாட்டு Tamil Nadu Assembly Session

வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. ஆளுநர் உரை மீது உதயநிதி குற்றச்சாட்டு

Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்….

நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? தி.மு.க.வுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி Minister Ramesh

நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? தி.மு.க.வுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி

Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்….

125 மருத்துவ சீட்களை இழக்கும் தமிழ்நாடு? உதயநிதி எச்சரிக்கை Udhayanidhi Stalin statement

125 மருத்துவ சீட்களை இழக்கும் தமிழ்நாடு? உதயநிதி எச்சரிக்கை

Udhayanidhi Stalin statement: தமிழ்நாடு 125 மருத்துவ இருக்கைகளை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்….

விஜய் முதல்வராவதை உதயநிதி தடுத்தார்.. மாணிக்கம் தாகூர் Manickam Tagore

விஜய் முதல்வராவதை உதயநிதி தடுத்தார்.. மாணிக்கம் தாகூர்

Manickam Tagore: விஜய் முதலமைச்சராவதை உதயநிதி தடுக்க முயற்சித்தார் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com