Udhayanidhi Stalin | துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ள உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
January 22, 2025
Udhayanidhi Stalin | துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ள உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: September 29, 2024 at 12:26 pm
Updated on: September 29, 2024 at 12:28 pm
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகும் உதயநிதிக்கு பாடலாசிரியர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்களை வாழ்த்துகிறேன் உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன். இந்த உயர்வு பிறப்பால் வந்தது என்பதில் கொஞ்சம் உண்மையும் உங்கள் உழைப்பால் வந்தது என்பதில் நிறைய உண்மையும் இருக்கிறது. பதவி உறுதிமொழி ஏற்கும் இந்தப் பொன்வேளையில் காலம் உங்களுக்கு மூன்று பெரும் பேறுகளை வழங்கியிருக்கிறது.
முதலாவது உங்கள் இளமை இரண்டாவது உங்கள் ஒவ்வோர் அசைவையும் நெறிப்படுத்தும் தலைமை மூன்றாவது உச்சத்தில் இருக்கும் உங்கள் ஆட்சியின் பெருமை. இந்த மூன்று நேர்மறைகளும் எதிர்மறை ஆகிவிடாமல் காத்துக்கொள்ளும் வல்லமை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
உங்கள் ஒவ்வோர் நகர்வும் மக்களை முன்னிறுத்தியே என்பதை மக்கள் உணரச் செய்வதே உங்கள் எதிர்காலம். என் பாடலைப் பாடிய ஒரு கலைஞன் துணை முதல்வராவதை எண்ணி என் தமிழ் காரணத்தோடு கர்வம் கொள்கிறது கலைஞர் வழிகாட்டுவார். துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நலம் தரும் நவராத்திரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com