காரசாரமான பேபி கார்ன் மிளகு கறி.. இப்படி ட்ரை பண்ணுங்க!

Food: கல் தோசை, சப்பாத்திக்கு சூப்பரான காமினேஷன். பேபி கார்ன் மிளகு கறி இப்படி செய்து அசத்துங்க.

Published on: February 27, 2026 at 2:30 pm

சென்னை, பிப்.27, 2026: அனைவரும் விரும்பி சாப்பிடும் பேபி கார்ன் மிளகு கறி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1 கப்
கடலை எண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்
கிராம்பு -4
ஏலக்காய் -4
பட்டை -4 துண்டு
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -½ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு

அரைக்க வேண்டியவை

மிளகு -3 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பேபி கார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து இதனுடன் பேபி கார்னையும் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து வறுக்கவும்.

இவை புரிந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் சேர்க்கக்கூடிய அதே அளவு தக்காளியும் சேர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பத்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரைடு ரைஸ்.. வீட்டிலேயே செய்யும் வழிமுறை

பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மீடியம் ஃப்ளேமில் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து மாவு பதத்திற்கு வந்த பின்னர் இதனுடன் வேகவைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் ஒரு கடாயில் மிளகு, சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து அந்த பொடியை கேட்கவும். அரைத்த பொடியை சேர்த்த பின்னர் இரண்டு நிமிடம் நன்கு கலந்து அடுப்பு தீயை ஆப் செய்யவும். இப்போது பேபி கார்ன் பெப்பர் கறி தயார். இது கல் தோசை, சப்பாத்தி, பூரி அனைத்திற்கும் சூப்பரான சைடு டிஷ். அனைவருக்கும் பரிமாறி மகிழவும்.

இதையும் படிங்க: வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்யலாம்!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!
Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com