Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்துசிவா (21), உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிபாண்டியன் (19), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த பட்டுசாமி என்பவரின் மகன் இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18), அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெருவை சேர்ந்த வால சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (18) ஆகிய நான்கு பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Alankulam: திருநெல்வேலியை அடுத்த ஆலங்குளத்தில் பெண்ணை அவரது கணவர் அவரது கணவர் வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்….
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்