திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
Published on: December 13, 2024 at 12:31 pm
Updated on: December 13, 2024 at 12:53 pm
Tiruvannamalai | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரியாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க ஆதாயம் அதிகரிக்கும் ; மரியாதை கூடும் : 12 ராசிகளின் இன்றைய (டிச.13,2024) பலன்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com