Ratan Tata Health Condition | மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்.7ஆம் தேதி ரத்தன் டாட்டா தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நிராகரித்தார். வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “எனது வயது தொடர்பான உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 86 வயதான அவர் தனது உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு உறுதியளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்