‘Durga Squad’ for Women’s Safety in Bengal : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘துர்கா படை’ என்ற சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
‘Durga Squad’ for Women’s Safety in Bengal : மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘துர்கா படை’ என்ற சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

Published on: April 20, 2026 at 9:25 pm
கொல்கத்தா, ஏப்.20, 2026: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும் போது துர்கா படை அமைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க “துர்கா படை” என்ற சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று அறிவித்தார்.
மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை “பயத்திற்கும் நம்பிக்கையிக்கும்” இடையிலான போராட்டமாகச் சித்தரித்த சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது ஊழல் மற்றும் நிர்வாக அலட்சியம் ஆகியவற்றில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சைந்தியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய சிங், “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நாங்கள் ‘துர்கா படை’யை அமைப்போம். பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும், “நீங்கள் பயத்தை விரும்புகிறீர்களா அல்லது பாதுகாப்பை விரும்புகிறீர்களா? ஊழலை விரும்புகிறீர்களா அல்லது வளர்ச்சியை விரும்புகிறீர்களா? தாதாயிசத்தை விரும்புகிறீர்களா அல்லது ஜனநாயகத்தை விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: சாதாரண பெண்கள் முன்னேற்றத்தை கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்? பிரதமர் மோடி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com