India Post Revenue : 2026 நிதியாண்டில் இந்தியா போஸ்ட் ரூ. 15,296 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.
India Post Revenue : 2026 நிதியாண்டில் இந்தியா போஸ்ட் ரூ. 15,296 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.

Published on: April 20, 2026 at 9:40 pm
புதுடெல்லி, ஏப்.20, 2026: 2025–26ஆம் நிதியாண்டில் அஞ்சல் துறை வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது; இக்காலகட்டத்தில் அஞ்சல் துறை ரூ. 15,296 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16% அதிகமாகும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற அஞ்சல் துறையின் வணிக மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, ஆண்டின் வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட சிந்தியா, இந்த ஆண்டை ‘இந்தியா போஸ்ட் நிறுவனத்திற்கு ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க” ஆண்டாக வர்ணித்தார். மேலும், பல்வேறு சேவைப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சியையும், செயல்பாட்டுத் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பேசிய அவர், “உண்மையிலேயே, அஞ்சல் துறைக்கு இது ஒரு மிகச் சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்துள்ளது. நாங்கள் மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்; சேவையின் வீச்சை விரிவுபடுத்தியுள்ளோம்; புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். மேலும், வரவிருக்கும் நிதியாண்டில் இன்னும் வலுவான வளர்ச்சியை எட்டும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்றார்.
2024–25 நிதியாண்டில் அஞ்சல் துறையின் வருவாய் ரூ. 13,218 கோடியாக இருந்தது. மொத்தமுள்ள 23 அஞ்சல் வட்டங்களில், எட்டு வட்டங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக எட்டியுள்ளன என்றும், 14 வட்டங்கள் 80 முதல் 90 சதவீதத்திற்கு இடைப்பட்ட இலக்கை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிகர லாபம் உயர்வு.. ஒரு பங்குக்கு ரூ.12 ஈவுத்தொகை பரிந்துரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com