Bihar By elections | பிகார் இடைத்தேர்தல் தேதியை மாற்றக்கோரி பிரசாந்த் கிஷோர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
Bihar By elections | பிகார் இடைத்தேர்தல் தேதியை மாற்றக்கோரி பிரசாந்த் கிஷோர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
Published on: November 9, 2024 at 8:43 pm
Updated on: November 9, 2024 at 8:54 pm
Bihar By elections | சாத் பூஜை நடக்கும் பீகாரில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்கவில்லை என பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
அதாவது, பீகாரில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை (நவ.9, 2024) மனு தாக்கல் செய்தது.
ஜன் சூரஜ் கட்சி தாக்கல் செய்த மனுவில், பீகாரில் சாத் பூஜை காரணமாக இடைத்தேர்தல் தேதியை நவம்பர் 13-ல் இருந்து 20-ம் தேதிக்கு மாற்ற வேண்டும்” என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளாவில் மத நிகழ்வுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதிகள் மாற்றப்பட்டதையும் ஜன் சூரஜ் கட்சி முன்வைத்துள்ளது.
தொடர்ந்து, பீகாரில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காதது நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் சமத்துவ உரிமையை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தராரி, ராம்கர், பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நான்கு தொகுதிகளில், பெலகஞ்சில் அதிகபட்சமாக 14 வேட்பாளர்கள் உள்ளனர், இதில் ஆர்ஜேடியின் விஸ்வநாத் குமார் சிங், ஜெகனாபாத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேந்திர பிரசாத் யாதவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க வயநாட்டில் பிரியங்கா, ‘ஜமாத்-இ-இஸ்லாமி’ ஆதரவில் போட்டி: பினராய் விஜயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com