Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Published on: November 8, 2024 at 2:24 pm
Kerala | கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை (நவ. 7, 2024) காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடுகிறார் என்றார். கேரளாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பினராய் விஜயன், “மதச்சார்பின்மைக்காக நிற்பவர்கள் அனைத்து வகையான மதவெறியையும் எதிர்க்கக் கூடாதா?” என்றார்.
வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முகமூடி தற்போது அம்பலமாகியுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி அங்கு வேட்பாளராக போட்டியிடுகிறார். இதில், காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? ஜமாத்-இ-இஸ்லாமி பற்றி நம் நாட்டிற்குத் தெரியாதது அல்ல. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் சித்தாந்தம் ஜனநாயக விழுமியங்களுடன் ஒத்துப்போகிறதா?” என்றார்.
ஜமாத்-இ-இஸ்லாமி தேசத்தின் நிர்வாகக் கட்டமைப்பை அலட்சியம் செய்கிறது. மேலும், ந்த அமைப்பு தேசத்தையோ அதன் ஜனநாயகத்தையோ மதிப்பதில்லை. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் போது இந்த அமைப்பின் முகத்திரை அம்பலமானது. ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி நீண்ட காலமாக தேர்தல்களை எதிர்த்து, பலமான மதவெறி நிலைகளை ஊக்குவித்தது. இருப்பினும், அவர்கள் பாஜகவுடன் (காஷ்மீரில்) தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஜமாத்-இ-இஸ்லாமி அங்கு மூன்று அல்லது நான்கு இடங்களில் போட்டியிட திட்டமிட்டது. CPI(M) தலைவர் முகமது யூசுப் தாரிகாமி நிற்கும் இடத்தில் கவனம் செலுத்தி தாரிகாமியை தோற்கடிப்பதே குறிக்கோளாக இருந்தது, தொடர்ந்து, “வயநாட்டில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி, காஷ்மீரில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமியில் இருந்து வேறுபட்டவர்கள் என்று கூறினாலும், அவர்களின் சித்தாந்தம் அப்படியே உள்ளது” என்றார்.
வயநாட்டில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னாள்களில் வயநாட்டை காலி செய்ததால் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மராட்டிய மண்ணில் பிறந்தவர்களுக்கு இலவச கல்வி: உத்தவ் தாக்கரே வாக்குறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com