Pawan Kalyan | ஆந்திராவில் மகளிருக்கு எதிரான குற்றங்களில் வேகமாக செயல்பட வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் அனிதாவிடம் பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார்.
Pawan Kalyan | ஆந்திராவில் மகளிருக்கு எதிரான குற்றங்களில் வேகமாக செயல்பட வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் அனிதாவிடம் பவன் கல்யாண் கேட்டுக்கொண்டார்.
Published on: November 4, 2024 at 7:02 pm
Pawan Kalyan | ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியின் உள்துறை அமைச்சர் அனிதா புகார்கள் மீது வேகமாக செயல்பட வேண்டும்” என்றார். தொடர்ந்து, “யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை அமல்படுத்திய விதத்தில் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும் பவன் கல்யாண், “உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் தான் உள்துறை அமைச்சர். உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், இல்லாவிட்டால் உள்துறையையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்” என்றார்.
இதையடுத்து, “யோகி ஆதித்யநாத் போல நீங்கள் இருக்க வேண்டும்… அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை, உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன, அனைவரும் சிந்திக்க வேண்டும்” என்றார்.
“உள்துறையை நான் கேட்கவோ எடுக்கவோ முடியாது. நான் செய்தால், இந்த நபர்களுக்கு விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாம் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மாற மாட்டார்கள். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்” என்றார்.
முன்னதாக சனிக்கிழமை (நவ.3, 2024) நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், ஆனால் நான் எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் அல்லது அதைப் பற்றி அவமரியாதையாகப் பேசுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க ஜனசேனா கட்சியில், ‘சனாதன பாதுகாப்பு படை’: பவன் கல்யாண் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com