கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து.. 9 பேர் மரணம்!

Kolkata hotel fire accident: கொல்கத்தா ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியானார்கள்.

Published on: August 19, 2026 at 2:04 pm

கொல்கத்தா, ஆக.19, 2026: கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள மிர்சா காலிப் தெருவில் அமைந்த ஹோட்டலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும், பெண்ணும் அடங்குவர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம், மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பீர்பூம் மாவட்டம் தாராபித் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு ஹோட்டல் தீ விபத்துக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. அங்கு எட்டு பேர் உயிரிழந்திருந்தனர்.

காவல்துறை தகவலின்படி, அதிகாலை 2 மணியளவில் தீ ஏற்பட்டது. அதை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப் பணிக்காக காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மைத் துறை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

“அடர்த்தியான புகை காரணமாக, தீயணைப்பு வீரர்கள் மேல் தளங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ அணைக்கப்பட்ட நிலையில், தற்போது cooling process நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க தீயணைப்புத் துறையின் தலைமையகம் சம்பவ இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. தாராபித் ஹோட்டல் தீ விபத்து விவகாரத்தில் ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்டு, ஹோட்டல் நிர்வாகிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், மாநிலத்தில் ஹோட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க :ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com