Congress corporator shot dead | உஜ்ஜெயின்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இன்று (அக்.11, 2024) அதிகாலை 5 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஹாஜி கலீம் கான் (60) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் நிலத்தகராறு விவகாரத்தில் கான் மீது ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் உஜ்ஜெயினி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீல்கங்கா காவல் நிலைய போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
Honor killing case: கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது….
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், தனக்கு எதிராக ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்….
தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை கத்தியா குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
குஜராத்தில் மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்