West Bengal | மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று (அக்.5, 2024) 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் போலீசார் “உடனடியாக அவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜெய்நகர் பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர், “உள்ளூர் மக்கள் புறக்காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் போலீசார் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், “பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள மகிஸ்மரி அவுட்போஸ்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் போலீசார் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், “சிறுமி கொலைக்கு எதிராக பா.ஜ.க.வினர் நீதி கோரி பேரணி நடத்தினார்கள். மேலும், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாக்கிறார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க
Stanley Hostel Theft: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக…
Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை…
Latur POCSO Case: லத்தூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பவன் பாலாசாஹேப் ஹர்படே என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து…
Marriage Fraud Case: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15.37 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், CRPF பெண் காவலர் செமிலா, அவரது…
Puzhal Lake Murder: புழல் ஏரிக் கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் முகுந்தன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்