West Bengal | மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று (அக்.5, 2024) 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் போலீசார் “உடனடியாக அவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜெய்நகர் பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர், “உள்ளூர் மக்கள் புறக்காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் போலீசார் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், “பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள மகிஸ்மரி அவுட்போஸ்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் போலீசார் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், “சிறுமி கொலைக்கு எதிராக பா.ஜ.க.வினர் நீதி கோரி பேரணி நடத்தினார்கள். மேலும், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாக்கிறார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்….
Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன….
Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை…
West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்