Menstrual abdominal pain | மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க டாக்டர் தீபா கூறிய எளிய வீட்டு மருத்துவம் பற்றி இப்போது பார்க்கலாம். பெண்க குழந்தைகள் பொதுவாக ஆரோக்கியமற்ற உணவு வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், சத்து இல்லாத உணவு பொருள்களை எடுத்துக் கொள்வதாலும், அதிகப்படியான மாமிச உணவு வகைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை உட்கொள்வது வயிற்று வலிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மாதம் தோறும் ஏற்படும் இந்த வயிற்று வலி பிரச்னையில் இருந்து விடுபட ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம், சிறிதளவு இடித்த இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜரோன் வலி நிவாரணையாக செயல்பட்டு வயிற்று வலியை நீக்குகிறது. மேலும் இந்த பானத்தில் கலந்துள்ள பெருங்காயம் உடலில் வாயு தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள பிளேவினாய்டுஸ் தசைகள் இறுக்கமாக இருப்பதால் ஏற்படும் வலியை நேர்த்தி செய்து வலியில்லாத மாதவிடாய் ஏற்பட வழிவகுக்கிறது.
இந்த பானத்தை குடிப்பதன் மூலம் மாத்திரை ஏதும் இல்லாமலே இயற்கை முறையில் வயிற்று வழியினை குறைக்க முடியும். பெண்கள் பொதுவாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாதம்தோறும் ஏற்படக்கூடிய வயிற்று வலியினை தடுக்க முடியும்.
இதையும் படிங்க
Pet Health Tips: செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 7 முக்கிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்….
Parampara Book Release : இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சார மரபுகளை விளக்கும் பவன் கௌஷிக்கின் புதிய நூல் ‘பரம்பரா’ புதுடெல்லியில் வெளியீடப்பட்டது….
Body Weight Benefits for Seniors: வயதானவர்களுக்கு சற்று கூடுதல் உடல் எடை நன்மை தரலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது….
Aakash Healthcare Liver Transplant: ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனை, சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது….
Best Cookware for Healthy Cooking: நான்ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு பாத்திரம் உள்ளிட்டவற்றில் எதில் சமைப்பது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்