How to make sothi kulambu | திருமணமான மணமகனுக்கு மறு வீட்டின் போது செய்து பரிமாறக் கூடிய ஆரோக்கியமான உணவு சொதி குழம்பு ஆகும். தேங்காய் பால் பயன்படுத்தி செய்யக்கூடிய, சத்தான ஆரோக்கியமான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
சிறு பருப்பு – 100 கிராம்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கிராம்பு- 5
பட்டை – சிறிய துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூல்
மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்லு
சிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – 2
பீன்ஸ் – 10
உருளைக்கிழங்கு -2
முருங்கைக்காய் – 1
பட்டாணி – சிறிதளவு
தேங்காய் பால் – 300 ml
தேங்காய் எண்ணெய் – 50 ml
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு குக்கரில் பருப்பு சேர்த்து பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை நன்கு கழுவி நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு, சீரகம், பட்டை, கிராம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் அரைத்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுதினை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இந்த தருணத்தில் குழம்புக்கு தேவையான உப்பினை சேர்த்து மூன்று நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். இந்த கலவையுடன் வேக வைத்த சிறு பருப்பைசேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இவை கொதித்ததும் இதனுடன் கெட்டியான தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
தேங்காய்ப்பால் சேர்த்த பின்னர் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பினை ஆஃப் செய்ய வேண்டும். இப்போது சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு தயார். இந்த சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, நான், மற்றும் சுடு சோறுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க
How to make vegetable momos | ரோட்டு கடையில் சாப்பிடக்கூடிய சுவையான மோமோஸ் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?…
How to make Ennai Kathirikkai Kulambu | சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி பண்ணுங்க….
How to make egg curry | இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான முட்டை கறி இப்படி செய்து பாருங்கள்….
How to make semiya kuzhipaniyaram | சுவையான சேமியா குழிப்பணியாரம் இப்படி செஞ்சு பாருங்க….
How to make egg gravy | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நார்த் இந்தியன் முட்டை கிரேவி இப்படி பண்ணுங்க….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்