Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெஜிடபிள் புலாவ் எப்படி செய்யணும் தெரியுமா?
Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெஜிடபிள் புலாவ் எப்படி செய்யணும் தெரியுமா?
Published on: April 23, 2025 at 10:29 am
சுவையான வெஜிடபிள் புலாவ் இப்படி செஞ்சு பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
பட்டை -2 துண்டு
கிராம்பு-2
ஏலக்காய் -3
கல்பாசி -1
முந்திரி பருப்பு -10
பிரியாணி இலை -2
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
புதினா -1 கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
கேரட் -1 கப்
உருளைக்கிழங்கு -1கப்
பட்டாணி -1 கப்
தக்காளி -1
தேங்காய்ப்பால் -1½ கப்
பாஸ்மதி அரிசி -1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் -1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறியதும் நீலவாக்கில் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வேகமாக வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: பால், முந்திரி போதும்… வீட்டிலேயே குல்பி ஐஸ் ரெடி!
வெங்காயம் வதங்கி பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் புதினா இலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும். விழுதின் பச்சை வாடை நீங்க பின்னர் இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் ஊற வைத்த பட்டாணி சேர்த்து கலந்து விடவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதனுடன் அரை மணி நேரம் ஊற வைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை(1½) கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும். இப்போது உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் சிறிது நெய் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜிடபிள் புலாவ் தயார்.
இதையும் படிங்க: அண்ணாச்சி பழத்தில் அல்வா.. அட ரொம்ப ஈஸி.. வீட்டிலேயே செஞ்சு பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com