Food: குழந்தைகள் விரும்பும் குல்பி ஐஸ் சர்க்கரை, க்ரீம் இல்லாமல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Food: குழந்தைகள் விரும்பும் குல்பி ஐஸ் சர்க்கரை, க்ரீம் இல்லாமல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: March 28, 2025 at 1:17 pm
Updated on: March 28, 2025 at 1:19 pm
வெயில் காலத்தில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான குல்பி ஐஸ் சர்க்கரை, க்ரீம் இல்லாமல் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பால் – 1½ லிட்டர்
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி அளவு
குங்குமப்பூ -1 ஸ்பூன்
அச்சுவெல்லம் -3
பாயில் சீட் – தேவைக்கேற்ப
ஐஸ் குச்சி -4
செய்முறை
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் சேர்த்து காய்க்க வேண்டும். ஹை ஃபிளேமில் வைத்து ஒரு கொதி வந்த பின்னர் மீடியம் ஃப்ளேமில் வைத்து பாலை கலந்து விடவும். காய்க்கும் பொழுது வரும் ஆடையை பாலிலேயே சேர்த்து கலந்து விடவும். இடையிடையே ஹை மற்றும் மீடியம் ஃப்ளேமில் மாற்றி வைத்து கலந்து விடவும்.
பால் அரை லிட்டர் வரும் வரை கலந்து விட்டு காய்க்கவும். பின்னர் ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பினை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரி பேஸ்ட் பாலுடன் சேர்க்கும் பொழுது கட்டி பதம் கொடுக்கும். ¼ கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: அரை கிலோ ஆட்டு ஈரல் போதும்.. சுடச்சுட வறுவல் இப்படி பண்ணுங்க!
இதையும் ஏற்கனவே அரைத்து வைத்த முந்திரி பேஸ்டுடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். பால் நன்கு கெட்டியாகி வரும்போது இதனுடன் அரைத்து வைத்த முந்திரி விழுதினை சேர்த்து கலந்து விடவும். பால் நன்கு காய்ந்து அரை லிட்டராக மாறும் வரை காய்ச்சல். நன்கு கெட்டியாகி வந்த பின்னர் அடுப்பை ஆப் செய்து பாலினை குளிர வைக்கவும்.
இதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி இதனுடன் வெல்லம் சேர்த்து அரைக்கவும். வெள்ளத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம். நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் ¼ கப் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு கிளாஸில் சேர்த்து அதன் மேல் பகுதியில் பாயில் சீட்டை வைத்து மூடவும் பாயில் சீட்டின் நடுவில் சிறிய ஓட்டை இட்டு அதில் ஐஸ் குச்சியை மெதுவாக நுழைக்கவும்.
பின்னர் இதனை ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைக்க வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு பிறகு குல்பி ஐஸ் உள்ள கிலாசின் வெளிப்பகுதி சிறிது நேரம் தண்ணீரில் படும்படி வைத்து பின்னர் பாயில் சீட்டை நீக்கி மெதுவாக எடுத்தால் சுவையான குல்பி தயாராகி இருக்கும். இதை அனைவருக்கும் பரிமாறி மகிழவும்.
இதையும் படிங்க : காரசாரமான சுவையில் கடாய் சிக்கன் ; இப்டி டிரை பண்ணி பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com