Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரிக்கு தொட்டுக்க சுவையான பூரி மசாலா இப்படி பண்ணுங்க.
Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரிக்கு தொட்டுக்க சுவையான பூரி மசாலா இப்படி பண்ணுங்க.
Published on: April 22, 2025 at 5:40 pm
சுவையான பூரி மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -2
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
கருவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
அரைக்க வேண்டியவை
பொட்டுக்கடலை -¼ கப்
தண்ணீர் -1 கப்
செய்முறை
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு சேர்த்து மூன்று விசில் வைத்து அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இதனுடன் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் இதனுடன் நீல வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வேகமாக வதங்குவதற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் நீல வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் அவித்து வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து சேர்த்துக் கொள்ளவும். அடுப்புத்தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து கலந்து விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். அடி பிடிக்காமல் இருக்க இடையே கிளறி விடவும். இப்போது சுவையான பூரி மசாலா தயார். இது பூரி மற்றும் தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.. உருளைக் கிழங்கு வறுவல்.. இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com