திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பில் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பில் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: August 26, 2024 at 5:09 pm
Updated on: August 26, 2024 at 5:12 pm
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள், அனுபவமுள்ள வக்கீல்கள் மற்றும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை வருகிற செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அனுபவமுள்ள வழக்குரைஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான தகவல்களுக்கு districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தை பார்வையிடவும். இதற்கான விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் செப்டம்பர் 6ஆம தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்டு “தலைவர், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், நெல்லை -627002” என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது நினைவுக்கூரத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com