India Post Office Recruitment 2025: அஞ்சல் அலுவலக துறையில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 21 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
India Post Office Recruitment 2025: அஞ்சல் அலுவலக துறையில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 21 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: February 16, 2025 at 10:49 am
இந்தியன் அஞ்சல் ஆட்சேர்ப்பு 2025: இந்திய அஞ்சல் அலுவகத்தில் 21,413 கிராமின் டாக் சேவக் (ஜிடிஎஸ்) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில், கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் போன்ற பணிகளும் அடங்கும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள்அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
இந்தியா போஸ்ட் GDS 2025 க்கான விண்ணப்ப செயல்முறை பிப்.10ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3ஆம் தேதி ஆகும். திருத்தங்கள் செய்வதற்கான செயல்முறை மார்ச் 6 முதல் 8 வரை செய்யலாம்.
விண்ணப்ப விவரங்களை மார்ச் 6 மற்றும் 8 க்கு இடையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள்
ஒடிசா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், குஜராத், ஹரியானா, டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காலியிடங்களுக்கு இந்த ஆர்சேர்ப்பு நடைபெறுகிறது.
தமிழகத்திலும் அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்திலும் அதிக காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்திலிருந்து ஆங்கிலம் மற்றும் கணிதம் கட்டாயப் பாடங்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சம்பளம்
கிளை போஸ்ட் மாஸ்டர்கள் (பிபிஎம்) பதவிக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரையிலான டிஆர்சிஏவைப் பெறுகிறார்கள்.
அதே சமயம் அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் (ஏபிபிஎம்) மற்றும் டாக் சேவக்ஸ் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை டிஆர்சிஏவைப் பெறுகிறார்கள்.
தேர்வு செயல்முறை
தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்வு செயல்முறைக்கு தேர்வு இருக்காது. அதற்கு பதிலாக, 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் தேவைப்பட்டால் அடிப்படை மருத்துவ உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
இணையதளத்தில் பதிவு செய்தல், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தல், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தல், விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பித்தல் மற்றும் சமர்ப்பிப்பை இறுதி செய்தல் ஆகியவற்றை செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எதிர்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க ரிசர்வ் வங்கியில் மருத்துவ பணி.. எழுத்துத் தேர்வு இல்லை.. இன்றே கடைசி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com