Health: ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Health: ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Published on: February 16, 2025 at 11:24 am
ஒரு வாகனம் நல்ல முறையில் இயங்குவதற்கு இன்ஜின் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று ஒரு மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயம் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள் மனிதனின் உணவு பட்டியலில் சேர்க்கக்கூடிய ஒரு சிறந்த பகுதி ஆகும். ஏனெனில் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளன. மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும் இயற்கை பழ வகைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த பெர்ரி பழங்கள் ஆக்சிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன. இந்த ஆக்சிஜனேட்டிகள் இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு முக்கிய பங்கு வைக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. ஆப்பிள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை சிட்ரஸ் பழங்களின் வகைகளாகும்.
அவகேடோ
அவகேடோ பழங்கள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய பழ வகைகளில் ஒன்றாகும். இதில் எல்டிஎல் அதாவது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் மோனோசாட்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவகடோ இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வைக்கிறது.
மாதுளை
மாதுளை பழம் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. மாதுளை பழத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் மேம்படுத்த உதவும் ஆக்சிஜனேற்றுகள் உள்ளன. இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய இயற்கை பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு போன்ற அபாயங்கள் ஏற்படாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழி வகுக்கிறது.
இதையும் படிங்க : குடற்புழு பிரச்சனை அண்டாது; வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்து, ஓமம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com