மகளிர் மசோதா.. நீண்ட காலமாக காத்திருந்த பெண்கள்.. பா.ஜ.க. எம்.பி ரேகா சர்மா!

Delimination Bill 2026: மகளிர் மசோதாவுக்காக நீண்ட காலமாக பெண்கள் காத்திருந்தார்கள் என பா.ஜ.க எம்.பி ரேகா சர்மா கூறினார்.

Published on: April 16, 2026 at 5:42 pm

புதுடெல்லி, ஏப்.16, 2026: மகளிர் மசோதாவுக்காக பெண்கள் நீண்டகாலமாக காத்திருந்தார்கள் என பா.ஜ.க எம்.பி ரேகா சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பெண்கள் நீண்ட காலமாக காத்திருந்த இந்த நிலை, தற்போது விரைவில் நிறைவேற உள்ளது. நான் அரசாங்கத்திற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.

ரேகா சர்மா பேட்டி

(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)

தொடர்ந்துப் பேசிய ரேகா சர்மா, “இது தாமதப்படுத்தப்பட்டு புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்டிருந்தால், நாங்கள் இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்” என்றும் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க. இடதுசாரிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கிறேன்.. அசாதுதீன் ஒவைசி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com