Miss You Movie Teaser | சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
Miss You Movie Teaser | சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
Published on: November 12, 2024 at 1:18 pm
Miss You Movie Teaser | என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் திரைப்படம் ‘மிஸ் யூ’ . கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனருடன் இணைந்து அசோக். ஆர் வசனம் எழுதியுள்ளார். இதற்கிடையில் படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது. படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.
இதையும் படிங்க ஒ.டி.டி.யில் ஸ்பை த்ரில்லர் மூவீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com