ரஜினிக்கு வில்லனாகும் பிரமாண்ட இயக்குனர்? பரபரப்பில் கோடம்பாக்கம்!

Rajinikanth’s Next Film Twist : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா ஷங்கர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published on: April 26, 2026 at 11:27 am

சென்னை, ஏப்.26, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஷோபனா அல்லது சிம்ரனை நடிக்க வைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

வில்லன் யார்?

இதற்கிடையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறுவதுடன், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில், படத்தில் கமல்ஹாசன் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து அவர் தலைவர் 173 படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வரலாற்று சிறப்பு மிக்க புதிய படத்தில் இணையும் அக்ஷய், ராணா? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com