கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்.. ஜி.வி பிரகாஷ் குமார்

GV Prakash Stays Off Ads : பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், “நான் எந்த விளம்பரங்களுக்கும் ஆதரவு தரமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Published on: April 26, 2026 at 11:31 am

சென்னை, ஏப்.26, 2026: நடிகர்- இசையமைப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, “நான் எந்த விளம்பரங்களுக்கும் ஆதரவு தரமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார் பிரஸ்மீட்

தொடர்ந்துப் பேசிய ஜி.வி பிரகாஷ் குமார், “சூதாட்டம் மற்றும் மதுபானம் தொடர்பான விளம்பரங்களை புரமோஷன் செய்ய மாட்டேன்; குளிர்பான விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் கொடுக்க முன்வந்தும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.

ஜி.வி பிரகாஷ் குமாரின் இந்தக் கருத்து, விளம்பரங்களில் பிரபலங்களின் பங்கு, சூதாட்ட விளம்பர விவாதம், மற்றும் மதுபான விளம்பர தடைகள் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

இசை- நடிப்பு

ஜி.வி பிரகாஷ் குமார் இசை மற்றும் நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அண்மையில் கென் கருணாஸின் யூத் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
மேலும் ஹேப்பி ராஜ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இவர் ஜோ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கர்ப்பிணியான கியாரா அத்வானி.. கட்டிப்பிடிக்க பாய்ந்த ரசிகர்.. பகீர் சம்பவம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com