ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்.. தென்னக ரயில்வே!

Erode–Jolarpettai Passenger : ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் வருகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Published on: April 26, 2026 at 11:32 am

சென்னை, ஏப்.26, 2026: ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம், தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ஜோலார்பேட்டை யார்டில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றம்

இந்த அறிவிப்பின்படி, மார்ச் 18, 19 மற்றும் 24, 2026 தேதிகளில், ரெயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
தொடர்ந்து, ஈரோடு – ஜோலார்பேட்டை பாசஞ்சர் (56108) ரெயில், ஜோலார்பேட்டை வரை செல்லாமல் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், ஜோலார்பேட்டை – ஈரோடு பாசஞ்சர் (56107) ரெயில், ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படாமல், திருப்பத்தூர் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

ஜோலார்பேட்டை மெயின் கேபினில் நடைபெறும் லைன் பிளாக் மற்றும் பவர் பிளாக் பணிகள் காரணமாக இந்த மாற்றம் அவசியமாகிறது; மேலும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மாற்றம் அவசியமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென்னக ரயில்வே, பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அறிவிப்புகள் மூலம் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து.. இந்திய ரிசர்வ் வங்கி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com