ரயிலில் இனி இந்த தவற பண்ணாதீங்க.. 6 மாதம் சிறை தண்டனை! தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை

Railway Rules : ரயிலில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

Published on: October 14, 2026 at 1:13 pm

சென்னை அக். 14, 2026: ரயில் பயணத்தின்போது ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்தாமல், செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, செல்போனில் பாடல்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும்போது ஹெட்போன் பயன்படுத்த வேண்டும் என்றும், தொலைபேசியில் பேசும்போது குறைந்த சத்தத்தில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே சட்டத்தின்படி என்ன தண்டனை?

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது, கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களால் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன என்றார். இதையடுத்து, அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்துவோருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டம்!

சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்க ஆந்திரா ஒப்புதல்.. முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்கு வெற்றி!
Krishna Water Supply to Chennai

சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்க ஆந்திரா ஒப்புதல்.. முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்கு

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டம்!
Edappadi Palaniswami

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com