Kiara Advani : கர்ப்ப காலத்தில் ரசிகர் ஒருவர் கியாரா அத்வானியைத் தழுவ முயன்றபோது நடந்த திகிலூட்டும் சம்பவத்தை, அவரது மெய்க்காப்பாளர் நினைவுகூர்ந்துள்ளார்.
Kiara Advani : கர்ப்ப காலத்தில் ரசிகர் ஒருவர் கியாரா அத்வானியைத் தழுவ முயன்றபோது நடந்த திகிலூட்டும் சம்பவத்தை, அவரது மெய்க்காப்பாளர் நினைவுகூர்ந்துள்ளார்.

Published on: April 25, 2026 at 5:33 pm
புதுடெல்லி, ஏப்.25, 2026: சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் மெய்க்காவலரான ஜீஷான் குரேஷி, நடிகையை கர்ப்ப காலத்தில் ஒரு ரசிகர் அணுகியபோது ஏற்பட்ட பதற்றமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் நகரில் நடைபெற்ற இவர்களின் ரகசிய திருமணத்தைச் சுற்றிய பல மாதங்களாக நடந்த மறைமுக நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்தப் பேட்டியை அவர் ஸ்கீரின் இதழுக்கு அளித்துள்ளார். அதில், ஒரு பிராண்ட் படப்பிடிப்பிற்காக வெளியே சென்றிருந்த சமயத்தில், கியாரா அத்வானி தனது வேனிலிருந்து இறங்கியபோது அவரிடம் நெருங்கி வந்து ரசிகர் ஒருவர் கட்டிப்பிடிக்க முயன்றதாக ஜீஷன் தெரிவித்தார்.

மேலும், ஜீஷன் உடனடியாகத் தலையிட்டதால், ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், அதைத் தணிப்பதற்காக அவர் ஆகாஷ் அம்பானியின் மேலாளரைத் தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டியிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், “அவர் சூட் அணிந்திருந்தார், நான் அவரை ஒரு கண்ணியமான மனிதர் என்று நினைத்தேன்,” என்று கூறிய ஜீஷன், நன்கு உடையணிந்த, தொழில்ரீதியாகத் தொடர்புடைய நபர்கள் கூட பிரபலங்களைக் காணும்போது நிதானத்தை இழக்கக்கூடும் என்று தெரிவித்தார். மேலும், கியாரா அத்வானி ரகசிய திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : மோகன் லால் மகன் பிரணவ்- கல்யாணி திருமணமா? ரசிகரின் கேள்விக்கு லிசி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com