Madurai HC : திருநங்கைகளை புறக்கணித்து வறுமைக்கு தள்ளுவது சமூகத்தின் தோல்வி; திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த வேண்டும் என நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Madurai HC : திருநங்கைகளை புறக்கணித்து வறுமைக்கு தள்ளுவது சமூகத்தின் தோல்வி; திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த வேண்டும் என நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Published on: April 26, 2026 at 11:22 am
மதுரை, ஏப்.26, 2026: திருநங்கைகள் குறித்து, விருதுநகர் பகுதியைச் சேர்ந்த யூ-ட்யூபர் சரத் குமார் என்பவர் அவதூறு காணொலிகள் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முன்பிணை கோரி சரத் குமார், மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் விசாரித்தார்.
அப்போது, “திருநங்கைகளை புறக்கணித்து வறுமைக்கு தள்ளுவது சமூகத்தின் தோல்வி” என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து, திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டம் குறித்தும் நீதிபதி கூறினார்.
அதாவது, “தமிழகத்தில் திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டம், திருநங்கைகளின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் அமையும்” எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
விரிவான அறிக்கை
தொடர்ந்து, “இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை ஜூலை 26-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், சமூகத்தில் திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நடிகர் பிரகாஷ் ராஜ் மீது புகார்.. ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com