Jailer 2 Box Office Collection: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, முதல் நாளில் உலகளவில் ரூ.127 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும், இரண்டாவது நாளிலும் கணிசமான வசூலைப் பெற்றதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jailer 2 Box Office Collection: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, முதல் நாளில் உலகளவில் ரூ.127 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும், இரண்டாவது நாளிலும் கணிசமான வசூலைப் பெற்றதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: October 17, 2026 at 7:57 pm
சென்னை, அக்.17, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.209.10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் மொத்த வசூலில் இந்தியாவில் இருந்து ரூ.112.10 கோடியும், வெளிநாடுகளில் இருந்து ரூ.97 கோடியும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ.127 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும், இரண்டாவது நாளிலும் கணிசமான வசூலைப் பெற்றதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இரண்டு நாட்களில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : இசையமைப்பாளர் தேவாவுக்கு திடீர் மாரடைப்பு.. 76வது வயதில் பிரிந்த உயிர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com