Sharda Sinha Passes Away | “பீகார் கோகிலா” என்று அழைக்கப்படும் பழம்பெரும் நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா காலமானார்.
Sharda Sinha Passes Away | “பீகார் கோகிலா” என்று அழைக்கப்படும் பழம்பெரும் நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா காலமானார்.
Published on: November 5, 2024 at 11:17 pm
Sharda Sinha Passes Away | போஜ்புரி, மைதிலி மற்றும் மாகஹி பாடல்களுக்காக கொண்டாடப்பட்ட புகழ்பெற்ற பாடகியான சாரதா சின்ஹா இன்று (நவ.5, 2024) காலமானார். அவர் 2018 முதல் சிகிச்சை பெற்றவருகிறார். புற்றுநோயியல் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமானது.
இந்த நிலையில், அவர் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். சாரதா சின்ஹாவின் மகன் அன்ஷுமன் சின்ஹா, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இறந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், ““உங்கள் பிரார்த்தனையும் அன்பும் எப்போதும் அம்மாவிடம் இருக்கும். சாத்தி மையா அவளை தன்னிடம் அழைத்தாள். அன்னை உடல் வடிவில் நம்முடன் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1, 1952 இல், பீகாரில் உள்ள சமஸ்திபூரில் பிறந்த சாரதா சின்ஹா, நாட்டுப்புற கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தார். இது பிராந்திய இசையில் அவரது பயணத்தை ஊக்கப்படுத்தியது. இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நடிப்பிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இன்ஷா அல்லா.. ‘புகைப்பதை நிறுத்திவிட்டேன்’: ஷாருக்கான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com