Shah Rukh Khan quits smoking | நடிகர் ஷாருக்கான் தான் தற்போது புகைப்பதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.
Shah Rukh Khan quits smoking | நடிகர் ஷாருக்கான் தான் தற்போது புகைப்பதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.
Published on: November 4, 2024 at 5:41 pm
Shah Rukh Khan quits smoking | அதிகம் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், “தற்போது புகைப்பதை நிறுத்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார். மும்பையில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் சனிக்கிழமையன்று தனது 59 வது பிறந்தநாளைக் கொண்டாட கூடியிருந்த தனது ரசிகர்களுடன் இதனை ஷாருக்கான் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, “ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. நான் இனி புகைபிடிப்பதில்லை, தோழர்களே” என்றார்.
மேலும், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவரது ரசிகர் மன்றத்தால் பகிரப்பட்ட நிகழ்வின் வீடியோவில், ஷாருக்கான் “புகைபிடிப்பதை விட்டுவிட்ட பிறகு எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நான் நினைத்தேன், ஆனால் நான் அதை இன்னும் உணர்கிறேன். இன்ஷா அல்லா. அதுவும் சரியாகிவிடும்” என்றார்.
“I am not smoking anymore guys.”
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 3, 2024
– SRK at the #SRKDay event ❤️❤️ #HappyBirthdaySRK #SRK59 #King #ShahRukhKhan pic.twitter.com/b388Fbkyc4
கடந்த காலங்களில் ஷாருக்கான் செயின் ஸ்மோக்கராக இருந்தார். அவர் தினமும் 100 சிகரெட்கள் வரை எடுத்துக் கொள்வதாக ஒருமுறை பழைய பேட்டியில் கூறி இருந்தார். தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ஷாருக்கான், “”அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்புப் படங்களைத் தயாரிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் மகிழ்விக்க விரும்புகிறேன்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்; வாழ்த்து சொல்ல மறந்தாரா அமிதாப்? ரசிகர்கள் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com