Actress Aishwarya Rai | நடிகையும், மருமகளுமான ஐஸ்வர்யா ராய்க்கு அமிதாப் பச்சன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Actress Aishwarya Rai | நடிகையும், மருமகளுமான ஐஸ்வர்யா ராய்க்கு அமிதாப் பச்சன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Published on: November 4, 2024 at 6:48 am
Actress Aishwarya Rai | நவம்பர் 1 ஆம் தேதி, ஐஸ்வர்யா ராய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு, அமிதாப் பச்சனோ, அபிஷேக் பச்சனோ அல்லது ஸ்வேதா பச்சனோ பகிரங்கமாக வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் பச்சன் குடும்பத்தினர் மீது எரிச்சலடைந்தனர். இதற்கிடையில் ரசிகர்கள் அமிதாப் பச்சனின் பழைய ட்வீட்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர்.
முந்தைய ஆண்டுகளில், ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்லாது அவரின் குடும்பமும் ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனைச் சுற்றியுள்ள விவாகரத்து வதந்திகளைப் பற்றி பச்சன் குடும்பத்தினர் அனைவரையும் யூகிக்க வைத்துள்ளனர். அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது.
இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். முன்னதாக அம்பானி வீட்டு திருமண விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா உடன் தனியாக கலந்துகொண்டார். அமிதாப் பச்சன் குடும்பம் தனியாக கலந்துகொண்டது. தொடர்ந்து, அபிஷேக்-ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக வதந்திகள் பரவின. மேலும், அபிஷேக் பச்சனும் மற்றொரு நடிகை உடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராய் பாதுகாவலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com