நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: November 5, 2024 at 11:35 pm
Updated on: November 5, 2024 at 11:40 pm
Actress Kasthuri | நடிகை கஸ்தூரி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, தமக்கு எதிராக பொய் பரப்புரைகள் நடைபெறுவதாக வருந்தினார்.
மேலும், தெலுங்கு மொழி தொடர்பாக தாம் தெரிவித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம், சாதி, இனம், மொழி ஆகியவற்றை தூண்டி பிரிவினையை உருவாக்குதல், தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி மீது பல்வேறு தரப்பினரும் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி, “பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தங்களை தமிழர்கள் போல் சித்தரித்து பிராமணர்களுக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்” எனக் கூறியதாகவும் சமூக வலைதளத்தில் சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com