Maharashtra | மராட்டியத்தில் ஆளும் மகாயுதி அரசின் 10 உத்தரவாதங்கள் இங்குள்ளன.
Maharashtra | மராட்டியத்தில் ஆளும் மகாயுதி அரசின் 10 உத்தரவாதங்கள் இங்குள்ளன.
Published on: November 5, 2024 at 11:43 pm
Updated on: November 5, 2024 at 11:44 pm
Maharashtra | மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஷிண்டேவின் சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி மற்றும் பிற சிறிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் வடக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஷிண்டே கூட்டணி அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது அவருடன் துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, 10 வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டதோடு, முதல் 100 நாட்களுக்கு வரவிருக்கும் ‘விஷன் மகாராஷ்டிரா 2029’ திட்டத்தையும் மகாராஷ்டிர முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். மேலும், “லட்கி பஹின்” திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, “25,000 பெண்களை காவல்துறையில் சேர்க்கும் திட்டமும் உத்தரவாதங்களில் அடங்கும். விவசாயக் கடன் தள்ளுபடி, விரிவாக்கப்பட்ட ஷேத்காரி சம்மன் யோஜனா, விவசாயிகளுக்கான ஆண்டு நிதி உதவியை ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை உயர்த்துதல் மற்றும் 25 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளும் இதில் அடங்கும்.
இதையும் படிங்க மகாராஷ்டிரா தேர்தல்; டி.ஜி.பி ராஷ்மி இடமாற்றம்: என்ன காரணம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com