Jaya TV diwali Special Programs | ஜெயா தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jaya TV diwali Special Programs | ஜெயா தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: October 25, 2024 at 12:26 pm
Updated on: October 25, 2024 at 12:27 pm
Jaya TV diwali Special Programs | ஜெயா தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி பலன்கள்
ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31 காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘தீபாவளி பலன்கள்’. இந்நிகழ்ச்சியில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் தீபாவளிக்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை ஜோதிடர்கள் பஞ்சநாதன், ஹரிஷ் ராமன், பீமராஜ ஐயர் ஆகியோர் கணித்துச் சொல்ல உள்ளனர். மேலும், தீபாவளி தொடர்பான பல்வேறு ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் ஹரிபிரசாத் ஷர்மா விளக்கமளிக்க விருக்கிறார். இந்நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்குகிறார்.
சிறப்பு பட்டிமன்றம்
ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31 அன்று காலை 10:00 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. வாழ்வின் மகிழ்ச்சி மத்தாப்புக்குச் சொந்தக்காரர்கள் 2Kக்கு முன் பிறந்தவர்களா, 2Kக்கு பின் பிறந்தவர்களா என தலைப்பிடப்பட்டுள்ள இப்பட்டிமன்றத்தில், 2K ஆண்டுக்கு முன் பிறந்தவர்களே மகிழ்ச்சிக்கு சொந்தக்காரர்கள் என திரு.ரவிக்குமார், திருமதி.மலர்விழி, திரு.உமாசங்கர் ஆகியோரும், 2Kக்கு பின் பிறந்தவர்களே மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர் என திரு.தாமல் சரவணன், திருமதி.அட்சயா, திரு.கடலூர் காளிதாஸ் வாதிட்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். இப்பட்டிமன்ற நிகழ்ச்சி வெறும் கேளிக்கைக்காக இல்லாமல் அறிவார்ந்த சான்றோர்கள் நன்மதிப்பை பெரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாங்க வேற மாதிரி
ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘நாங்க வேற மாதிரி’. இந்நிகழ்ச்சியில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘உசுரே’ திரைப்படத்தின் கதாநாயகன் டீஜே, கதாநாயகி ஜனனி, நடிகை மந்த்ரா, நகைச்சுவை நடிகர் ஆதித்யா கதிர் ஆகியோர் பங்கேற்று இப்படம் பற்றிய சுவையான தகவல்களை, படப்பிடிப்பு தளத்தில் இருந்தே நேரடியாக நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். திரை ஆர்வலர்களை கவரும் விதத்தில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளதாக சேனல் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க ஹோட்டலில் நடிகை பலாத்காரம்: ஜானி மாஸ்டருக்கு ஜாமின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com