விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் என்ன நடந்தது? என்பதை அருகில் இருந்து பார்த்தது போல் வலையொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் சினிமா விமர்சகர் பிஸ்மி.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் என்ன நடந்தது? என்பதை அருகில் இருந்து பார்த்தது போல் வலையொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் சினிமா விமர்சகர் பிஸ்மி.
Published on: November 24, 2024 at 11:39 am
Nayanthara Dhanush Issue | நடிகர் தனுஷ் நடிகை நயன்தாரா பிரச்சனை கோடம்பாக்கத்தை பரபரப்பு ஆக்கியுள்ளது. நயன்தாராவின் மூன்று பக்க அறிக்கை தான் இந்த பரபரப்புக்கு காரணம். நயன்தாரா தனது திருமணத்தை டாக்குமென்ட்ரி ஆக எடுத்து, அதை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிக்ஸ் தளத்திற்கு வழங்கி இருந்தார்.
இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நிமிட காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் பத்து கோடி வழங்க வேண்டும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
கோடம்பாக்கத்தில் புயலைக் கிளப்பிய இந்த விஷயத்தில், தனுசை திட்டி நடிகை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார். இந்த விஷயத்தில் நடிகர் தனுஷ் குறித்து பல்வேறு விதமாக தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன. இதற்கிடையில் சினிமா விமர்சகர் பிஸ்மி, நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்பதை நேரில் இருந்து பார்த்தது போல் புட்டு புட்டு வைத்துள்ளார்.
அதாவது நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவை கரெக்ட் செய்ய விக்னேஷ் சிவன் பலமுறை முயற்சித்துள்ளார். எடுத்த காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்தாராம். இதனால் ரூபாய் 4 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் ரூபாய் 17 கோடியை எட்டியதாம். இந்த விஷயங்கள் தனுசுக்கு தெரிய வர, படத்தையே ட்ராப் செய்ய நினைத்தாராம்.
இந்த நிலையில் தான் நயன்தாரா தன்னிடம் இருந்த சொந்த காசை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்தார் என பிஸ்மி கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட காட்சிகளை பயன்படுத்த தனுஷிடம் முறையான முறையில் அனுமதி பெறவில்லை எனவும் விக்னேஷ் சிவன் மீது பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க சினிமா மொத்த யூனிட்டுக்கும் வான்கோழி பிரியாணி; எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com