Actress Kasthuri | தமக்கு எதிராக பொய் பரப்புரைகள் நடைபெறுவதாக நடிகை கஸ்தூரி ஆதங்கப்பட்டுளளார்.
Actress Kasthuri | தமக்கு எதிராக பொய் பரப்புரைகள் நடைபெறுவதாக நடிகை கஸ்தூரி ஆதங்கப்பட்டுளளார்.
Published on: November 4, 2024 at 9:03 pm
Actress Kasthuri | நடிகை கஸ்தூரி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, தமக்கு எதிராக பொய் பரப்புரைகள் நடைபெறுவதாக வருந்தினார்.
இது குறித்து பேசிய கஸ்தூரி, “நான் பேசியதை திரித்து பொய் பிரசாரம் செய்கிறார்கள். வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். ஆனால், தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100% பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தெலுங்கு மக்கள் என்று நான் கூறவில்லை, இனவாதம் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை” எனக் கூறியுள்ள நடிகை கஸ்தூரி, “தனிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கடந்து போகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகை கஸ்தூரி, “பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தங்களை தமிழர்கள் போல் சித்தரித்து பிராமணர்களுக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்” எனக் கூறியதாகவும் சமூக வலைதளத்தில் சிலர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்; வாழ்த்து சொல்ல மறந்தாரா அமிதாப்? ரசிகர்கள் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com