Premalatha Vijayakanth | “எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என சீமானை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Premalatha Vijayakanth | “எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என சீமானை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Published on: November 4, 2024 at 9:19 pm
Premalatha Vijayakanth | தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்திடம் சீமானின் சமீபத்திய அரசியல் பேட்டிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த பிரேமலதா, “சீமான் திடீரென அந்நியனாக மாறுவார்; பின்னர் திடீரென அம்பியாக மாறுவார். எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என்றார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் முதல் அரசியல் மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தேசியம், தமிழ் தேசியம் என்ற பாதையில் பயணிக்கக் கூடாது; திராவிடத்தை வாழ வைக்கதான் வாரிசுகள் இருக்கிறதே? தமிழ் தேசியமா? திராவிடமா என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் சில கடுமையான வார்த்தைகளாலும் சீமான் விஜய்யை விமர்சித்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்; என்ன சொன்னார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com