ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்ய பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 2025 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகின்றன.
இந்தச் சிறப்பு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்
எஸ்.பி.ஐ
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2 சிறப்பு திட்டங்களை மார்ச் 31, 2025 உடன் முடிவுக்கு கொண்டு வர உள்ளது.
அந்தத் திட்டங்கள் அம்ரித் விருஷ்டி (444 நாள்கள்) மற்றும் அம்ரித் கலாஷ் (400 நாள்கள்) ஆகும்.
இதில் அம்ரித் விருஷ்டியில் பொதுக் குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
அம்ரித் கலாஷ் திட்டத்தை பொறுத்தவரை பொதுக்குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் கிடைக்கின்றது.
இந்தியன் வங்கி சிறப்பு எஃப்.டி திட்டங்கள்
இந்தியன் வங்கி இந்த் சுப்ரீம் 300 நாள்கள் மற்றும் இந்த் சூப்பர் 400 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது.
இந்தத் திட்டங்களில் அதிகப்பட்சமாக சிறப்பு (சூப்பர்) மூத்தக் குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா வங்கி 333 நாள்கள் மூன்சூன் தமாகா எஃப்.டி திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களுக்கு பொதுக் குடிமக்களுக்கு 7.15 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியும் வழங்குகிறது.
மேலும், 399 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு பொதுக்குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்குகிறது.
இந்தத் திட்டங்கள் 2025 மார்ச் 31 உடன் நிறைவு பெறுகின்றன.
ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
ஐ.டி.பி.ஐ வங்கி 555 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பொதுக்குடிமக்களுக்கு 7.40 சதவீத வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.90 சதவீத வட்டியும் கிடைக்கும்.
மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும் போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உறுதியான, பாதுகாப்பான ரிட்டன் அளிக்கின்றன. மேலும், இந்தத் திட்டங்களில் இடர்பாடுகளும் குறைவு.
எனினும் முதலீட்டுக்கு முன் பல்வேறு வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.
இதையும் படிங்க : Special FD Schemes:எஃப்.டிக்கு 8.05 சதவீதம் வட்டி.. இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்