வெளிநாட்டு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன்.. ஸ்ரீராம் பைனான்ஸ் முயற்சி!

Shriram Finance Eyes Foreign Loans : வெளிநாட்டு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறும் முயற்சியில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Published on: July 10, 2026 at 7:07 pm

Updated on: July 10, 2026 at 7:08 pm

மும்பை, ஜூலை 10 2026; ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளிநாட்டு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டி செலவில் கடன் பெறும் முயற்சியை தொடங்கியுள்ளது. நிறுவனம் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் (₹10,800 கோடி) அளவிலான கடனை டி பி எஸ் பேங்க், ஹெச்.எஸ்.பி.சி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் மற்றும் எம்.யு.எப்.ஜி போன்ற வங்கிகளிடமிருந்து பெறுகிறது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜப்பானின் Mitsubishi UFJ Financial Group (MUFG) நிறுவனம் பெரிய அளவில் பங்குகளை வாங்கியதன் பின்னர், தனது கடன் மதிப்பீடு உயர்ந்ததை பயன்படுத்திக் கொள்ளுகிறது. இந்த மதிப்பீட்டு மேம்பாடு காரணமாக, நிறுவனம் குறைந்த வட்டி விகிதத்தில் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து கடன் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த கடன் ஒப்பந்தம் முதன்முதலாக வெளிநாட்டு வங்கிகளின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. DBS, HSBC, Standard Chartered மற்றும் MUFG ஆகிய வங்கிகள் இதில் பங்கேற்கின்றன. மேலும், இன்னும் சில வங்கிகள் இதில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. இது ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் பெரிய நிதி திரட்டும் நடவடிக்கையாகும்.

இது குறித்து நிபுணர்கள் கூறுவதாவது, இந்த நடவடிக்கை NBFC துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். குறைந்த வட்டி செலவில் கடன் பெறுவதன் மூலம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் தனது வணிக விரிவாக்கத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிதி சேவைகளின் செலவைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்” என்றனர்.

இதையும் படிங்க; 49 சதவீத நிகர லாபம்.. ₹1,020 கோடி லாபம்.. டி.பி.எஸ் வங்கி..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com